By August 5, 20180 CommentsReport

விஸ்வரூபம் 2: போட்டியில் யுவன்..!!

விஸ்வரூபம் 2 படத்திற்குப் போட்டியாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

முன்னணி நாயகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் அந்தப் படத்தோடு போட்டிக்கு வெளியாகும் படங்களும் கவனம் பெறும். கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் இந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

படம் இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் கட் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பிரான்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாக உள்ளது. இந்தி பதிப்பின் புரொமோஷனுக்காக திங்கட்கிழமை மும்பை சென்ற கமல், அங்கு எடுத்த புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்குப் போட்டியாக நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியாக உள்ளது. ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் இளைஞர்களைக் கவரும்விதமாகக் காதலோடு ‘அடல்ட்’ கன்டண்டுகளை உள்ளடக்கி தயாராகி உள்ளதால் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதன் மற்றொரு சிறப்பம்சம் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை வசூலையும் குறிவைக்கலாம் என்பதே ஆகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*