By August 5, 20180 CommentsReport

ஹாலிவுட்டுக்கு ஓகே சொன்ன பிரியங்கா..!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாடகர் நிக் ஜோன்ஸும் நடிகை பிரியங்கா சோப்ராவும் காதலிக்கின்றனர்; விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என்ற தகவல் ஓர் ஆண்டுக்கும் மேலாக யூகமாகவே இருந்த நிலையில் சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் இருந்து அவர் விலகியபோது உறுதியானது. திருமணத்தைக் காரணமாகக் கூறியே படத்திலிருந்து அவர் விலகியதாக இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அந்தப் படத்தில் கேத்ரினா கைஃப் இணைந்துள்ளார்.

திருமணத்தைக் காரணம்காட்டி சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய சில தினங்களிலேயே ஹாலிவுட்டில் அவர் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அவர் ஹாலிவுட்டில் உருவாக உள்ள கௌபாய் நிஞ்சா வைக்கிங் (Cowboy Ninja Viking) என்ற படத்தில் இணைந்துள்ளார். இதில் கதாநாயகனாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற க்ரிஸ் ப்ராட் நடிக்கவுள்ளார். ‘யுனிவர்சல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் இயக்குநர் மைக்கேல் மெக்லாரன் (Michelle Maclaren) இயக்கவுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜூன் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா கைவசம் ஃபர்ஹான் அக்தரின் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*