By August 5, 20180 CommentsReport

இந்நாள் ‘விஐபி’யுடன் இணைந்த முன்னாள் ‘விஐபி’..!!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாரி 2 திரைப்படக் குழுவோடு பிரபுதேவாவும் இணைந்திருக்கிறார்.

குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றுத் திரைத் துறைக்குள் நுழைந்த இயக்குநர்களுள் ஒருவரான பாலாஜி மோகன் காதலில் சொதப்புவது எப்படி?, வாயை மூடி பேசுவோம், மாரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். காதலில் சொதப்புவது எப்படிப் படத்தைத் தெலுங்கிலும், வாயை மூடி பேசுவோம் படத்தை மலையாளத்திலும் ரீமேக் செய்துள்ளார். இருப்பினும் மாரி படம் தான் அவருக்குப் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

தனுஷ் – காஜல் அகர்வால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இதனையடுத்து தற்போது மாரி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் நாயகனாக நடிக்க, காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் எனப் பலர் நடித்துள்ளனர்.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதனிடையே மாரி 2 திரைப்படத்தில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இது பற்றி தனுஷ், “நான் பெற்ற பாக்கியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவில் நடனத் துறை வளர்வதற்கு முக்கியக் காரணம் பிரபுதேவாதான் . அவர் எங்கள் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார். நடனத்தில் அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்தது. என்ன ஒரு கணம் எனக்கு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*