By August 6, 20180 CommentsReport

கோபம் வர்ற மாதிரி விளம்பரம் செய்யலாம்..!!

பியார் பிரேமா காதல் என்னும் படத்துக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளார் நடிகர் சிவா.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கிவரும் படம் பியார் பிரேமா காதல். இதில் பிக் பாஸ் முதல் சீஸனில் பங்கு பெற்றதன் மூலம் பாப்புலர் ஆனவர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யுவனின் ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸுடன் இணைந்து கே புரொடக்‌ஷன்ஸும் தயாரிக்கிறது.

யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை விளம்பரம் செய்யும் விதமாக நடிகர் சிவா தோன்றி நடித்துள்ள வீடியோ ஒன்று டிவிட்டரில் நேற்று (ஆகஸ்ட் 1) வெளியாகியிருக்கிறது.

அதில் யுவனைத் திட்டுவது போன்று பேசியிருக்கும் சிவா, “என்னைவைத்து படம் ரிலீஸ் செய்வதாகச் சொல்லிவிட்டு, என்னையே படம் ரிலீஸ் பற்றி அறிவிப்பை வெளியிட சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*