By August 6, 20180 CommentsReport

அதிதி இடத்தை ஆக்கிரமிக்கிறாரா நிவேதா?..!!

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் நிவேதா பெத்துராஜ் இணையவுள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதைத் தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்து கவனம் பெற்றார்.

நடிப்புத் திறமையைக் கடந்து எல்லா நடிகர்களுக்கும் எல்லா கதாபாத்திரங்களும் பொருந்திப் போவதில்லை. அதிலும் குறிப்பாக நடிகைகளில் கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பு பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே வகையான கதாபாத்திரங்களே அமையும். ஆனால் நிவேதாவின் தோற்றம் அனைத்துவிதமான பாத்திரங்களுக்கும் பொருந்திப்போகிறது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி, திமிரு பிடிச்சவன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து பொன்மாணிக்க வேல் என்ற காவல் துறையை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் இணையவுள்ளார். மதி, அதிதி மேனன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது நிவேதா இணைந்துள்ளார். அதிதி மேனனுக்குப் பதிலாக ஒப்பந்தமாகியுள்ளாரா அல்லது மற்றொரு மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*