By August 12, 20180 CommentsReport

உடல் உறுப்புகளை தானம் செய்த நடிகை ராதிகா ஆப்தே..!!

இந்தி நடிகை ராதிகா ஆப்தே தோணி, தமிழில் வெற்றி செல்வன், அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. வெறும் நடிப்பதோடு அல்லாமல் சமூக விழிப்புணர்வு வி‌ஷயங்களிலும் ராதிகா ஈடுபட்டு வருகிறார்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

உடல் உறுப்பு தானத்திற்கு பதிவிட்ட கொடையாளி என்பதற்கான அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு இதை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆனது என பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்ட சில தமிழ் திரை பிரபலங்களும் தங்கள் உடலை தானம் செய்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*