By August 15, 20180 CommentsReport

மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு..!!

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கி உள்ள இந்த படத்தில் முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தயாரித்ததில் ஆத்ம திருப்தியுடன் இருக்கிறேன். மன நிறைவுடன் இருக்கிறேன் என்று விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் டிரைலரை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை வெளியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*