By August 16, 20180 CommentsReport

சிம்புவை தொடர்ந்து டி.ராஜேந்திரருடன் கபிலன் வைரமுத்து கூட்டணி..!!

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மதுவுக்கு எதிராக ஒரு தனிப்பாடலை உருவாக்கி இருக்கிறார். பாலமுரளி இசையில் இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். கடந்த வருடம் வெளியான `கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் – கபிலன் வைரமுத்து கூட்டணி இந்த தனிப்பாடலின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

மது கலாசாரத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடி உள்ள தனிப்பாடலின் தலைப்பு மற்றும் பாடல் வெளியாகும் தேதி போன்ற விவரங்களை கபிலன் குழுவினர் விரைவில் காணொலியாக வெளியிடுகிறார்கள். இந்த பாடலை காட்சிப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

முன்னதாக கடந்த ஆண்டு பாலமுரளி பாலு இசையில், கபிலன் வைரமுத்து எழுதிய பண மதிப்பிழப்பு பாடலை நடிகர் சிம்பு பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*