By August 25, 20180 CommentsReport

புதிய முயற்சியில் இறங்கியிருக்கும் சீமராஜா படக்குழு..!!

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் `கரோக்கி பூத்’ என்ற விளம்பர யுத்தியை படக்குழு கையாள உள்ளது. திரை அரங்குகளில் அமைக்கபட்டுள்ள பிரத்யேக பூத்துகளில் `சீமராஜா’ படத்தின் பாடல்கள், பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும்.

அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு டப்மாஷ் செய்யலாம். இது அவர்களது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி.இமானுடன் கலந்துரையாட வாய்ப்பு கிட்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*