By September 1, 20180 CommentsReport

இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்..!!

‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.

`இந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகே‌ஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ‌ஷங்கர்.

கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
9


Post a Comment

CAPTCHA
Refresh

*