By September 8, 20180 CommentsReport

ரஜினிகாந்த் – விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*