By September 19, 20180 CommentsReport

கண்ணே கலைமானே படத்தின் சென்சார் வெளியீடு..!!

`தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே’.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

மதுரைப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*