By September 22, 20180 CommentsReport

உறியடி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு (செப்டம்பர் 20) தொடங்கியுள்ளது..!!

சாதி அரசியலை மையமாகவைத்து உருவாகிய உறியடி திரைப்படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. 2016ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் குமார். இப்படத்தை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். தென்காசியில் இன்று இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். டைட்டிலின் கீழ் ‘தத்தகிட தத்தகிட தித்தோம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் மூலம் கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமூகக் கருத்துக்களை வலியுறுத்துவதுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான சுதாகர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகும் ‘96’ திரைப்படத்தின் இசை வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. அந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உறியடி படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைக்கிறார். பிரவின் குமரன் ஒளிப்பதிவு செய்ய, லினு.எம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*