By September 22, 20180 CommentsReport

வைபவ், நந்திதா முதன்முறையாக முழுநீள காமெடி படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்..!!

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்குநராக அறிமுகமாகும் படம் டானா. ஆர்.கே.நகர் படத்தில் நடித்து முடித்துள்ள வைபவ் இந்தப் படத்தில் நந்திதாவுடன் இணைந்து நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார்.

ராணி பேட்டையை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் சூப்பர் நேச்சுரல் காமெடி ஜானரில் உருவாகிறது. காவல்துறையினரை டானாக்காரன் என்றும் காவல்நிலையத்தை டானா எனவும் அழைக்கும் பழக்கம் இருந்துள்ளது. படத்தில் பாண்டியராஜனின் குடும்பத்தில் அனைவரும் காவல்துறை அதிகாரிகளாக இருக்க அவர் மட்டும் காவல்துறை அதிகாரியாக முடியவில்லை. தனது மகன் வைபவ்வையாவது காவல்துறை அதிகாரியாக்கவேண்டும் என முயலுவதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருப்பங்கள் கொண்ட திரைக்கதையில் அமானுஷ்ய சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

முண்டாசு பட்டி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களைத் தொடர்ந்து நந்திதா முழுநீளக் காமெடியில் இந்தப் படத்தில் நடிக்கிறார். ஹரிஷ் பெரடி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*