By September 22, 20180 CommentsReport

தனது பிறந்த நாளோடு சேர்த்து வளைகாப்பு நிகழ்வையும் கொண்டாடியுள்ளார் நடிகை காவ்யா மாதவன்..!!

தமிழில் காசி, என்மன வானில், சாது மிரண்டால் போன்ற படங்களில் நடித்ததன் வாயிலாகக் கவனம் ஈர்த்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் பெரிய அளவில் படங்களில் நடித்திராத அவர் மலையாளத்தில் தொடர்ந்து நடித்தே வந்தார். தனது சிறந்த நடிப்பிற்காக அங்கு சில மாநில விருதுகளையும்கூட பெற்றுள்ளார் காவ்யா.

2016ஆம் ஆண்டு மலையாள நடிகரான திலீப்பை திருமணம் செய்த அவர் தனது பிறந்த நாளை a (செப்டம்பர் 19) கொண்டாடினார். அத்துடன் சேர்த்து தனது வளைகாப்பு நிகழ்ச்சியையும் கொண்டாடியுள்ளார் காவ்யா. நெருங்கிய சொந்தங்கள், திலீப் மற்றும் காவ்யாவின் நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

குழந்தையை வரவேற்கும் விதமாக காவ்யா மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தார். மேலும் அந்நிகழ்வு நடந்த இடமும்கூட மஞ்சள் நிறத்தாலான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*