By September 22, 20180 CommentsReport

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஜீனியஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது..!! (வீடியோ)

ஒரே நேரத்தில் ஜீனியஸ், சாம்பியன், ஏஞ்சலினா ஆகிய மூன்று படங்களின் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சுசீந்திரன். விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு படங்களை இயக்குவதில் தமிழ் சினிமாவில் சுசீந்திரன் முக்கியமானவர். கபடி, கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படங்களை இயக்கிவரும் இவர், படிப்பை மட்டும் திணித்தால் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை ஜீனியஸ் படத்தின் மூலம் காட்டவுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஜீனியஸ் திரைப்படத்தின் டீசரில் படிப்பு மட்டும் வாழ்க்கையாகிவிடாது; மாணவர்களின் கனவு என்ன என்பதைப் பெற்றோர்கள் கேட்டு அதன் வழியில் நடக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகக் காட்சிகள் அமைந்துள்ளன. அடக்கி வைக்கப்பட்ட கனவுகள் வெடித்துச் சிதறும்போது மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறுவதைப் படம் காட்சிப்படுத்துகிறது. அறிமுக நடிகர் ரோஷன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதே கருத்தை ஏற்கெனவே சில படங்கள் பேசியுள்ள போதிலும் முழுக்க அதை மட்டுமே எடுத்துக்கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிறு வயது காட்சியிலிருந்து, பிரதான கதாபாத்திரம் வளர்ந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வரை கதை இதை நோக்கியே பயணிக்கிறது.

சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*