By September 22, 20180 CommentsReport

கண்ணே கலைமானே படத்தில் தான் பங்கு பெற்றிருப்பது தனக்குக் கிடைத்த பரிசு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!

உதயநிதி, தமன்னா முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் கண்ணே கலைமானே. சீனு ராமசாமி இந்தப் படத்தை தேனி வட்டாரத்தை மையமாகக்கொண்டு இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் பணிகள் முழுவதும் நிறைவு பெற்று தணிக்கைத் துறைக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து உதயநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கைச் சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும்போது அதைப் பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரைக் காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சர்யமும் இல்லை. அப்படிப்பட்ட ஓர் அழகிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பரிசு. பலரும் கூறியதுபோல, சீனு ராமசாமி சாரின் திரைப்படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும், அவை நல்ல வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. உதயநிதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*