By September 23, 20180 CommentsReport

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடிகராக அறிமுகமாகவுள்ளார்..!!

நேற்றுதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு கோலி ஆர்மி செம சந்தோஷத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறது தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு.

யெஸ்! விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்துவந்த கோலி முதன்முறையாக படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ஒரு மென்சோகம் என்னவென்றால் அது முழுநீளப் படமல்ல, குறும்படமென்பதுதான். ஆனாலும், தங்களின் ஆதர்ஷ கிரிக்கெட் வீரரை குறும்படத்தின் வாயிலாகவாவது கொண்டாடித் தீர்த்துவிடலாம் எனும் முனைப்பில் இயங்கிவருகிறது கோலி ஆர்மி.

படம் குறித்த அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள கோலி , பத்து ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு அறிமுகம் எனக் குறிப்பிட்டு இதைப் பகிர்ந்திருக்கிறார். ‘ட்ரெய்லர்: தி மூவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. வ்ராக்ன் புரொடக்‌ஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது.

கோலிக்கு நடிப்புதான் புதுசு என்றாலும் சினிமா அவருக்கு பெரிய தூரம் ஒன்றும் இல்லையென்பதும், காரணம் பிரபல இந்தி நடிகையான அனுஷ்கா ஷர்மாவைத்தான் கோலி திருமணம் செய்திருக்கிறாரென்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*