By September 23, 20180 CommentsReport

விஜய் சேதுபதியுடன் கூட்டணி: இமான் சொல்வது என்ன?..!!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இணைவது குறித்து மனம் திறந்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்

நடிகர் சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான விக்ரம் நடித்த

‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியிருந்தவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்துத் தனது அடுத்த படத்தை எடுக்கவுள்ளார்.

வாலு மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களுக்கு எஸ். தமன் இசையமைத்திருந்தார். ஆனால் இந்தப்படத்தில் புதிதாக டி. இமானுடன் களமிறங்கியிருக்கிறார் விஜய் சந்தர். இமானுடன் இவர் இணைவது இதுதான் முதல் முறை என்றாலும் விஜய் சேதுபதியுடன் இமான் இணைவது புதிதல்ல.

சொல்லப்போனால் விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் ஆன முன்னணி மெலடிகளை கணக்கிட்டால் அதில் நிச்சயமாக ‘ரம்மி’யில் இடம்பெற்ற ‘கூடை மேல கூடை வச்சு’ பாடலும், ‘றெக்க’யில் இடம்பெற்ற ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலும் கட்டாயம் இடம்பெறும். இதில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘கண்ணக்காட்டு போதும்’கூட சிறப்பான மெலடிதான். இவையெல்லாம் வந்திருந்தது விஜய் சேதுபதி-இமான் கூட்டணியில்தான். எனவே இந்தப்படத்திலும் அதேபோல ஏதேனும் மேஜிக் பாடல்களை ரசிகர்கள் கட்டாயம் எதிர்பார்க்கலாம்.

முன்னணி நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் இதைத் தயாரிக்கும் நிலையில் இந்த கூட்டணி குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டி.இமான். அதில் மதிப்புமிக்க ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் விஜய் சந்தர் இயக்க விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணைவது மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளதகாவும் தெரிவித்துள்ள அவர், இறைவனின் மகிமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*