தனுஷ் என்னை கவர்ந்துவிட்டார் – அதிதி ராவ்..!!
தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.
தற்போது பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் படம் இது. தனுஷ் இயக்கத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது,
‘முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ்’ என்று பாராட்டி உள்ளார்.