By September 30, 20180 CommentsReport

சிவாஜி பேரன் – சுஜா வருணி நவம்பரில் திருமணம்..!!

ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் சுஜா வருணி தெரிவித்திருப்பதாவது,

தனக்கும் சிவகுமார் என்பவருக்கும் நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள், என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிவாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*