ஒரே இடத்தில் ரஜினி, சூர்யா..!!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்று வருகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, இந்தி நடிகர் போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின் இடையில் நொய்டாவில் சூர்யா தேசிய பாதுகாப்பு அதிகாரி கெளதம் கங்குலி, ஐபிஎஸ் அதிகாரி ஷாலின் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.