By October 11, 20180 CommentsReport

டயானா விருதை வென்ற தங்கமீன்கள் செல்லம்மா..!!

ராம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தங்கமீன்கள்’. இதில் ராம் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ராமின் மகளாக சாதனா நடித்திருந்தார். அப்பா – மகளுக்கு இடையேயான பாசத்தை கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகி பேரன்பு படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் பல்வேறு விருதுக்கு தேர்வாகி உள்ளது.

இந்நிலையில் சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது வென்றிருக்கிறார். இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*