By October 13, 20180 CommentsReport

அஜித்துக்காக காத்திருக்கிறேன் – ஹன்சிகா..!!

நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.

இதுபற்றி கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.

காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*