By October 14, 20180 CommentsReport

மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்..!!

விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பைரவா படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இந்தப் படத்தின் ஆடியோ மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படக்குழு அக்டோபர் 19-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அறிவிப்பாக அமைந்துள்ளது. காரணம் அக்டோபர் 17-ம் தேதி கீர்த்தி சுரேசின் பிறந்த நாள் வருகிறது.

விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் அடுத்த நாளான அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. சர்கார் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவதால் முந்தைய இரண்டு நாட்கள் போக தற்போது மூன்று நாட்களுமே கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக அமைந்துள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*