என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா..!!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்ஜிகே. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்த நிலையில், எஞ்சிய காட்சிகளை விரைவில் படமாக்கி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கடைசியாக ராஜமுந்திரியில் படப்பிடிப்பை முடித்த சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் இணைந்தார்.
சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் டெல்லியில் நடந்து வந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து வருகிற நவம்பரில் சூர்யா என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் பிரபு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.