மாரி 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..!!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தனுஷ் தற்போது வரலாற்று கதை ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.