By November 10, 20180 CommentsReport

வாழ்த்து மழையில் ப்ரியா..!!

தனது காதல் மனைவியான ப்ரியாவை மனம் உருக வாழ்த்தி, வாழ்த்து மழையில் நனைத்துள்ளார் இயக்குநர் அட்லி.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து ராஜா ராணி வாயிலாக இயக்குநராக அறிமுகமாகி பின்னர் விஜய்யின் தெறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கியதன் வாயிலாக பெருத்த கவனத்தைக் கோலிவுட்டில் பெற்றிருப்பவர் அட்லி. சீரியல்களிலும் சிங்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் துணை நடிகையாக வலம்வந்துகொண்டிருந்த ப்ரியாவுக்கும் இயக்குநர் அட்லிக்கும் இடையே காதல் உண்டானது.

பின்னர் 2014ஆம் ஆண்டு முக்கிய திரைப் பிரபலங்கள் முன்னிலையில் அவர்களது திருமண விழா சிறப்பாக முடிந்தது. இந்நிலையில் அந்தத் தம்பதி நேற்று (நவம்பர் 9) தமது 4ஆவது திருமண நாளைக் கொண்டாடியது. இதையொட்டி அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ப்ரியாவை வாழ்த்தி பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “ ப்ரியாவை எனக்கு பரிசாக அளித்த இறைவனுக்கு நன்றி. நட்பாக, மனைவியாக, மகளாக, தேவதையாக வலம்வரும் ப்ரியாவுடன் 4ஆவது திருமண ஆண்டைக் கொண்டாடுகிறேன். இதனையொட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த அட்லியின் பிறந்தநாளின்போது இதேபோல அட்லியை வாழ்த்தி நடிகை ப்ரியா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*