By November 10, 20180 CommentsReport

சீதக்காதியில் ஸ்பெஷல் கனெக்சன்..!!

விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் சுவாரஸ்ய கனெக்சன் உருவாகியுள்ளது.

தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகி நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு, மாதம் ஒரு படமாவது வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ரம்யா நம்பீசனுடன் இணைந்து நடித்துள்ள சீதக்காதி எனும் படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. பட்ஜெட் குறைவான சிறிய படங்களின் வெளியீட்டை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவிருந்த தமது பட வெளியீட்டைத் தள்ளிப் போட்டது சீதக்காதி படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் 3ஆவது லுக் போஸ்டரை நேற்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ள படக்குழு, இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதை உறுதி செய்துள்ளது. இந்தப் படத்திற்கு ’96’ படத்தில் இசை அமைத்ததன் வாயிலாகக் கவனம்பெற்ற கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 96 பட பாடல்கள் நல்ல கவனத்தைப் பெற்றதால் இந்தப் பட பாடல்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் விஜய் சேதுபதி நடித்த சில படங்களுடன் இப்படத்திற்கு சுவாரஸ்யமான ஒரு கனெக்சனும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் படம் வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. எப்போதாவது சில படங்கள் மற்ற கிழமைகளில் வெளியாகும். அந்தவகையில் பார்த்தால் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இமைக்கா நொடிகள் அதன் பின்னர் வெளியான செக்கச்சிவந்த வானம், அதையடுத்து வெளியான 96 ஆகிய மூன்று படங்களுமே வியாழக்கிழமைகளில்தான் வெளியாகியிருந்தன.

தற்போது சீதக்காதி படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாவதால் இந்தப் படமும் வியாழனன்றே வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இப்படி 4 படங்கள் ஒரே கிழமையைக் குறிவைத்து வெளியாவதால் இவை யதார்த்தமாகவே அமைந்ததா அல்லது திட்டமிடலா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*