By November 10, 20180 CommentsReport

சசிக்குமார் படத்தின் கதை.!!

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் திரைப்படத்தின் கதைக் களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது இயக்கும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இவர் இயக்கிய இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் சுந்தரபாண்டியன் கதையின் தொடர்ச்சியாக மீண்டும் சசிக்குமாரை கதாநாயகனாகக் கொண்டு கொம்புவச்ச சிங்கம்டா படத்தை இயக்கிவருகிறார்.

இதில் சசிகுமாருடன், மடோனா செபாஸ்டின், கலையரசன், ஆரவ், சூரி, யோகி பாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி, ஸ்ரீபிரியங்கா, துளசி உள்படப் பலர் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதைக் களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1994வரையிலா 4 ஆண்டுகளில் நடக்கும் கதை. மதுரை அருகில் உள்ள சிறு நகரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்து, அந்த சம்பவம் என்ன? எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் அமைத்துள்ளது. 1990 காலகட்டத்தின் காட்சிகளுக்காக அப்போதுள்ள உடைகள், சினிமா போஸ்டர்கள், பணம் உள்ளிட்டவைகளை படக்குழுவினர் சேகரித்து வருகின்றனர். காரைக்குடி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்படப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*