By November 12, 20180 CommentsReport

விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக படப்பிடிப்பு காட்சிகளை முடித்த படக்குழு, பாடல் காட்சிகளுக்காக மும்பை சென்றிருந்தது. தற்போது அனைத்து விதமான காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Viswasam


Post a Comment

CAPTCHA
Refresh

*