By November 14, 20180 CommentsReport

இணைய தொடரில் பிரியா பவானி சங்கர்..!!

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.

இந்த நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*