சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரபல நிறுவனம்..!!
`சீமராஜா’ படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக கூறியிருந்தோம்.
தற்போது இந்த படத்திற்கு கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இதை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ஐரா’ படத்தையும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் இணை தயாரிப்பையும் செய்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படம் சமூகத்திற்கு தேவையான அரசியல் திரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.