By November 20, 20180 CommentsReport

ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடங்கமறு ரிலீசாகும் அதே வாரத்தில் தனுஷின் மாரி 2, விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*