ஜனவரியில் ரிலீசாகும் நயன்தாராவின் அடுத்த படம்..!!
நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான இமைக்கா நொடிகள் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா தற்போது ஐரா, விஸ்வாசம், சயீரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், எஸ்.கே.12 என பிசியாக நடித்து வருகிறார்.
இதில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொலையுதிர் காலம். நீண்ட நாட்களாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ள படக்குழு படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகும் என்று அறிவித்துள்ளது.
மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் `ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. பூஜா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படம் ஜனவரியில் ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், படத்தை வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீ1ஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவாரத்தில் தான் விஷாலின் அயோக்யா, கார்த்தியின் தேவ் படங்களை வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.