மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை எதிர்ப்பு – 2.0 படம் மறுதணிக்கை செய்யபடுமா?..!!
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘2.0’ திரைப்படம்.
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் இந்திய அளவில் படத்துக் கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பலமுறை படத்தை வெளியிடத் திட்ட மிட்டு கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில் படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை (29-ந்தேதி) வெளியாக உள்ளது. ஏற் கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
2.0 படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் செல்போன்கள் வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி 2.0 படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
எந்த வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரைலரில் செல்போன்கள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.