By December 2, 20180 CommentsReport

மாநகரம் இயக்குனர் படத்தில் கார்த்தி..!!

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*