By December 9, 20180 CommentsReport

அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..!!

சர்கார் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இயக்குனர் முருகதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நான் எங்கே போனாலும் அஜித்தின் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கேட்கும் ஒரே கேள்வி, ‘எங்கள் அஜித்துடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க? என்பதுதான். நிறைய இடங்களில் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

என்னுடைய முதல் படம் தீனாவில் அஜித்துடன் சேர்ந்ததுதான். அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாகி விட்டது. இன்னும் சேரவே இல்லை. இப்போது அஜித் இருக்கும் உயரத்துக்கு தகுந்தபடி, பக்கா மாஸாக ஒரு கதை பண்ண வேண்டும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் சேர்ந்தால், அப்படி ஒரு வெயிட்டான கதையாக இருக்கவேண்டும். அஜித்தைப் பார்க்கும் போது, ரசிகர்களின் ஆசையையும் என்னுடையை ஆசையையும் சொல்லிவிட்டேன். அஜித்துக்கு ஏற்றது மாதிரி பக்காவான, ஒரு மாஸ் கதையையும் தயார் செய்து வைத்திருக்கிறேன். அஜித் கதையைக் கேட்டு ஓகே சொல்லிவிட்டால், அடுத்து உடனே ஆரம்பித்துவிடலாம்’. இவ்வாறு முருகதாஸ் தெரிவித்தார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*