இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வால் எடுக்கும் புதிய முயற்சி..!!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.
இதில், காஜல் அகர்வால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவரும் ஐதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இத்தகவலை உறுதிப்படுத்தினார். ‘இந்தியன்’ படத்தில் வர்மக்கலை தெரிந்தவராக கமல் நடித்திருந்தார். அப்படம் வெளியான போது பலரும் ஸ்டைலாக அதனைப் பின்பற்றி வந்தார்கள்.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்துக்கு வர்மக்கலை தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக, தற்போது வர்மக்கலைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்று வருகிறார் காஜல் அகர்வால். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.