By December 20, 20180 CommentsReport

தன்னை விமர்சித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி..!!

‘ஆடுகளம்‘ படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச்சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த ‘பிங்க்‘ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அது பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பந்தமான படம்.

தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். டாப்சி அதிரடியான கருத்துகளை தெரிவித்து பரபரப்புகளையும் ஏற்படுத்துவார். டாப்சியின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் ’உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்குப் பிடிக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு டாப்சி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். “வாவ்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு குறிப்பாக எனது மூளையில் உள்ள செரிப்ரம் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த அங்கம் எது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். செரிப்ரம் என்பது பெருமூளை.

தன்னைப் பொதுவெளியில் கேவலமாக வர்ணித்த நபருக்கு பெருமூளை வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே டாப்சி இந்த டுவிட்டைப் பதிவு செய்திருக்கிறார். டாப்சியின் பதிலுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*