By December 21, 20180 CommentsReport

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு – சீதக்காதி ரிலீஸ்..!!

96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுதன் சுந்தரம் கூறியதாவது,

ஒரு சிறிய பிரச்சினையால் படம் வெளிவராது என்று சிலர் வேண்டுமென்றே வீண்வதந்தி பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் பொய். படம் சொன்னபடி 20-ஆம் தேதி (இன்று) ரிலீசாகும் என்றார்.

விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*