வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த அதுல்யா ரவி..!!
காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு நாடோடிகள் 2, அடுத்த சாட்டை என்று வரிசையாக படங்கள் வர இருக்கின்றன. தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
‘தாய்மை உணர்வு பெண்ணுக்கே உரியது என்பதுபோல தன்னை நம்பிவரும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆண்களிடத்தில் மேலோங்கி இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். இந்தக் குணாதிசயத்தைத்தான் ஆணுக்கான அடையாளமாகவும் நான் நினைக்கிறேன்.
மற்றபடி சிக்ஸ்பேக் வைத்துக்கொள்வதும் சாகசங்கள் புரிவதும் மட்டுமே ஆண்மையின் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். காதலியோ, மனைவியோ… யாராக இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரத்தை தொல்லை செய்யாத ஆண்தான் நல்ல துணையாக இருக்க முடியும்’ என்று உறுதியாக நம்புகிறேன்.
ஏனெனில், பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் அவளது மனம் வெறுக்காத வகையில் நடந்து கொள்வதும்தானே உண்மையான ஆண்மை. அப்படிப்பட்ட நபர் தான் எனக்கு துணையாக வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.