அப்பா இயக்கத்தில் நடிக்க சிரமமாக இருந்தது – அலிகான் துக்ளக்..!!
மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக். கடமான் பாறை படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். துக்ளக் அளித்த பேட்டியில் இருந்து, படிப்பு முடித்தபிறகு நடிக்க வரவே விரும்பினேன்.
ஆனால் இந்த படத்துக்கு கல்லூரி மாணவர் வயது கதாநாயகன் தேவை என்பதால் அப்பா வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டார். அப்பா இயக்கத்தில் நடித்தது சிரமமாக இருந்தது. மொபைலுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி இருப்பதை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
சினிமாவுக்காக சண்டை, நடிப்பு, நடன பயிற்சிகள் எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகன் என்று பெயர் எடுக்க வேண்டும். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.