By January 11, 20190 CommentsReport

இது நம்ம பூமி, தாய் மாதிரி – உதயநிதி..!!

`தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, வசுந்தரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலரை இன்று விஜய்சேதுபதி வெளியிட்டார். இதில் ‘இது நம்ம பூமி, தாய் மாதிரி’ என்று உதயநிதி பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

யுவன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை வருகிற பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*