அன்பு தொல்லையில் இருந்து மீண்ட அனுபமா..!!
தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மறுப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன.
அனுபமா இணைய தளத்திலும் கவர்ச்சியான படங்களை வெளியிடுவதில்லை. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் திரையுலகினரை குறிப்பாக இயக்குனர்கள் கவனத்தை ஈர்ப்பதுபோல் அமையவில்லை.
அனுபமா நடித்துள்ள படங்களில் சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார். அவரது செல்போன் நம்பர் பலருக்கு தெரியும். இந்நிலையில் அனுபமா செல்போனுக்கு தினமும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் செய்தி அனுப்புவதுடன் அவரை செல்போனில் அழைத்து பேசிக் கொண்டே இருப்பார்களாம். இதில் கோபமான அனுபமா என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்.
திடீரென்று தனது செல்போன் நம்பரை புதிதாக மாற்றியிருக்கிறார். அவரது செல்போன் நம்பர் மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தபோதும் அனுபமா அன்புதொல்லையிலிருந்து மீண்ட நிம்மதியில் இருக்கிறாராம்.