சோலோவாக களமிறங்கிய மகத்..!!
‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகத் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.
‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் மகத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். பிரபு ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார்.