இந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு..!!
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.
22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தற்போது கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிறது. 2021-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.