ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம்.
‘96’படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஸ் இணைந்திருக்கிறார். ஆனால், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இல்லை, அவரின் சகோதரியாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அதைத் தொடர்ந்து மறுபடியும் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.