இந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..!!
22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.
வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள். 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வசூல் பார்த்த நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து அக்ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.