சேரனுக்கு செக் வைக்கும் 3 நாயகிகள்..!!
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகுக்கு திரும்பியிருக்கிறார். ஒருபக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கியவர். ‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த சராயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.
சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.